திமுக கூட்டணியில் சி.பி.ஐக்கு‌ 2 சீட்.!! ஒப்பந்த கையெழுத்தானது!! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நான்கு தொகுதிகளை கேட்ட நிலையில் 2 தொகுதிகளை ஒதுக்கியதோடு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் கயொப்பமிட்டுள்ளனர். 

ஆனால் ‌இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை எது அறிவிக்கப்படவில்லை. கடந்த தேர்தலில் போட்டியிட திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகள் ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK allocated 2 seats to‌ cpi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->