இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்.! கள்ள ஓட்டு., போலீசுக்கு மிரட்டல்., திமுகவின் ரவுடிசமா? அராஜகமா? அடுத்தடுத்து வெளியாகும் காணொளிகள்.!  - Seithipunal
Seithipunal


நகர்ப்புற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி, மாநிலத் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி அளவில் நிறைவுபெற்றது.

இதில் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பாக வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ஆளும் கட்சியான திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தேர்தலில் வாக்குப்பதிவின் போது பல இடங்களில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், கள்ள ஓட்டு செலுத்தியதாகவும் பல இடங்களில் புகார்கள் எழுந்தது. குறிப்பாக கோவையில் ஆளுங்கட்சியினர் தேர்தல் வாக்குப் பதிவின்போது பணப்பட்டுவாடா உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 114 வது வார்டுக்கு உட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் திமுகவினர் அராஜக முறையில் நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், "மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது., ஏன் எங்களை கள்ள ஓட்டு போட விட மாட்டீர்கள்" என்று பகிரங்கமாக காவல்துறை அதிகாரிகளை மிரட்டுகின்றனர். 

மேலும், சென்னை திருவல்லிக்கேணி 115வது வார்டில் திமுக பிரமுகர் போலீசாரை மிரட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. 

இதேபோல், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk election 2022 viral video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->