திமுக ஆட்சி ஊழலுக்கு ஒரு முறை, தேச விரோதத்திற்கு ஒரு முறை என இரு முறை கலைக்கப்பட்டது...!!!- தமிழிசை சௌந்தரராஜன்
DMK government dissolved twice once corruption and once antinationalism Tamilisai Soundararajan
நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் உரையாடியபோது, " தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து சவால் விடுகிறேன்.

எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்! 2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்! " என்று தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன்:
இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்துரைத்ததாவது,"தமிழக மக்களின் Out of Control-ஆக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.
அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி அமைந்த பிறகு முதலமைச்சராக ஸ்டாலின் பதற்றத்துடன் இருந்து வருகிறார். மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்துதானே திமுக இருந்தது.
ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி" என்று பேசியுள்ளார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
DMK government dissolved twice once corruption and once antinationalism Tamilisai Soundararajan