இதுக்கு மேலயும் இந்த திமுக ஆட்சி நீடிப்பது வெட்கக்கேடு! பரபரப்பை ஏற்படுத்திய டிவிட்!
DMK Govt And PTR Audio issue
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார்.
அதில், திமுக அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், கே என் நேரு, துரைமுருகன், வேலு மற்றும் திமுக எம்பிக்கள் கனிமொழி, டி ஆர் பாலு உள்ளிட்ட பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார்.
மேலும் திமுகவிற்கு 1400 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், திமுகவினர் 3000 கோடி ரூபாய் அளவில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தமாக ஒரு லட்சத்து 34,000 கோடி அளவுக்கு திமுகவினர் சொத்து வைத்திருப்பதாக அண்ணாமலை அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகனும் அமைச்சருமான உதயநிதி, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே வருடத்தில் 30,000 கோடி பணம் குவித்து வைத்திருப்பதாக, திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஊடகவியலாளர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த ஆடியோவிற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடமிருந்தோ, திமுக தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், "முதல்வரின் மகனும், மருமகனும் ஒரே வருடத்தில் 30,000 கோடி சொத்து சேர்த்ததாக மாநிலத்தின் நிதியமைச்சர் புலம்பி இருக்கிறார். இனியும் இந்த ஆட்சி நீடிப்பது வெட்கக்கேடு" என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவரின் மற்றொரு ட்விட்டர் பதிவில், அண்ணாமலை மீது வழக்குத் தொடர்வேன் என்று சொல்லும் அமைச்சர் உதயநிதி, தைரியம் இருந்தால் பழனிவேல் தியாகராஜன் மீது வழக்கு தொடுவாரா? அல்லது உள்குத்து உடன் பிறப்பு மீது வழக்கு தொடர்வாரா? என்று கேள்வி எழுப்பு உள்ளார்.
English Summary
DMK Govt And PTR Audio issue