திமுக வேட்பாளர்கள் யார்..? "துரைமுருகன்" பதிலால் எகிறும் எதிர்பார்ப்பு.!!
DMK loksabha election candidate list releasing tomorrow
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் போடப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் இறுதிச் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இவ்விரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட கரூர், ஆரணி மற்றும் திருச்சி ஆகிய தொகுதிகளை மீண்டும் ஒதுக்க திமுக தலைமை மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கரூர் மற்றும் ஆரணி தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பரபரப்பான சூழலில் வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்கை நீர்வத் துறை அமைச்சர் துறைமுருகன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுக்கு பதில் அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவுற்றது. திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (இன்று) அல்லது நாளை மறுநாள் (நாளை) வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தார். தற்போது வரை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
English Summary
DMK loksabha election candidate list releasing tomorrow