டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வீண் முயற்சி - அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal



டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'டங்ஸ்டன் ஏலத்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என 2023 அக்டோபரில் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

இந்த ஏலம் சட்டம்-ஒழுங்கு சூழ்நிலைக்கு வழிவகுக்கும், இதனை மாநில அரசே கையாளவேண்டிய சூழல் ஏற்படும். கனிமவளத் துறை ஆணையரின் கடிதத்தில், நில விவரங்கள் எதுவும் இல்லை.

அரிட்டப்பட்டியில் பல்லுயிர் தளம் உள்ளது. அது தெரிந்தே மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. ஏல அறிவிப்புக்கு ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் அதை நன்கு அறிவார்கள். அது வீண் முயற்சிதான்.

சுரங்கம் குத்தகைக்கு வழங்கப்பட வேண்டும் என்பது மாநில அரசுக்குத் தெரியும். குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும்.

மாநில அரசின் எதிர்ப்பு இருந்தபோதிலும், மத்திய அரசு ஏலம் விடுத்தது ஏன்? முதல்வரின் கடிதத்துக்குப் பின்னரே, கனிமவளத் துறை அமைச்சகம் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கருதி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister satement about Arittapatty issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->