திமுக முன்னாள் எம்எல்ஏ., திடீர் மரணம்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் : முன்னாள் திமுக சட்டமன்ற சுறுப்பினர் கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த 1996-2001ம் ஆண்டு வரை கபிலர்மலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.கே.வீரப்பன்.

1996 ஆம் ஆண்டு தேர்தலில், நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவருக்கு 2001 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்றும், இதனால் தி.மு.க.,வுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கே.கே.வீரப்பன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அண்மைய காலமாக கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA KKVeerappan  


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->