சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் - கனிமொழி! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரையில்  நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில், அவர்களில் பெரும்பான்மையானோருக்கு நிகழ்விடத்திலேயே  முதலுதவி அளிக்கப்பட்டது

நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 15 லட்சம் பேர் எந்த சிக்கலும் இன்றி நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதுகாப்பாக திரும்பிச் செல்ல போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வில்லை. அதனால் தான் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி, சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Kanimozhi say about Chennai Air Show


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->