சி.எஸ்.ஐ பிஷப்புக்கு விழுந்த தர்ம அடி.. திமுக எம்பிக்கு "7 நாள் கெடு"..! தவறினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்.!!
DMK MP to explain within 7days on attack on CSI Bishop
திருநெல்வேலி மாவட்டம் சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தை பூட்டி வைத்துக் கொண்டவர்களை தட்டி கேட்டதால் பிஷப் அடித்து விரட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஞானதிரவியம் இருந்து வருகிறார். இவர் வகித்து வந்த நெல்லை மாவட்ட சிஎஸ்ஐ திருமண்டலத்தில் கல்வி நிலை குழு செயலாளர் மற்றும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கி பேராயர் பர்ன்பாஸ் உத்தரவிட்டார்.
சான்ஸ் பள்ளியின் தாளாளராக வழக்கறிஞர் அருள்மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் பள்ளி வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று நெல்லை மாவட்ட சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தை பூட்டியதோடு வேற யாரும் உள்ளே நுழையக் கூடாது என அலுவலகத்தின் வாசலிலேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊழிய ஸ்தானத்தின் பிஷப் காட்பிரே நோபல் அலுவலகத்திற்குச் சென்றார்.
அப்பொழுது அவரை தடுத்து நிறுத்திய திமுக எம்பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதோடு அடித்து ஓட விட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் முன்பே இந்த தாக்குதல் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பிஷப் காட்பிரே நோபல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை திமுக எம்பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக புகார் அளித்தார். மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திமுக எம்பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்களுடன் தன்னை தாக்கியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் திமுக எம்பி ஞானதிரவியம் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக புகார் வந்துள்ளதால் அதன் மீது 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
English Summary
DMK MP to explain within 7days on attack on CSI Bishop