இது புதுசா இருக்கே.!! தொகுதியே குறிப்பிடாமல் ஒப்பந்தம்.!! குழப்பத்தில் திமுக உடன்பிறப்புகள்.!!
DMK singed election agreement without
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்ற 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெவித்தார்.
அதேபோன்று திமுக - மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் "தங்களுடைய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் எந்த தொகுதியில் போட்டி என்பது முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
திமுக முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி உடன் போடப்பட்ட தேர்தல் ஒப்பந்தத்தில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என குறிப்பிட்டு இருந்தது அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியில் ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.
இதற்கு காரணம் திமுக நடத்திய கருத்து கேட்டு கூட்டத்தின் போது கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தினாலோ கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலோ தேர்தல் பணி ஆற்றிட வேண்டுமென திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது.
அதை வேளையில் திமுக கூட்டணியில் முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரசுடன் திமுக தலைமை இன்னும் பேச்சு வார்த்தை நடக்காத சூழலில் தொகுதிகளை குறிப்பிடாமல் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தேர்தல் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது திமுக தலைமை.
திமுக தலைமையின் இந்த நடவடிக்கையால் தங்கள் தொகுதியில் திமுக வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? அல்லது கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என திமுக உடன் பிறப்புகள் குழப்பத்தில் உள்ளது.
English Summary
DMK singed election agreement without