இது நல்லா இல்ல!!!திமுக பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருக்கிறது...!!! - நயினார் நாகேந்திரன்
DMK talking about separatism Nainar Nagendran
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்தார்.அதில் அவர் வெளியிட்ட மாநிலங்களுக்கான அதிகாரம் பற்றிய 110-வது விதி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. அணியினர் வெளிநடப்பு செய்தனர்.

அந்த வெளிநடப்பில் பா.ஜ.க. சட்டசபை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன்,சரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.
நயினார் நாகேந்திரன்:
அந்த வெளிநடப்புக்கு பிறகு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது, "தனி நாடு கோருவது போல தி.மு.க. பிரிவினைவாதம் பேசி கொண்டிருக்கிறது.
தேர்தலுக்காக இது போன்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இனியும் அது போன்று தான் செய்வார்கள். இதனால் தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது" எனத் தெரிவித்தார்.அதன் பின்னர் அவரிடம் நிருபர்கள், நீங்கள் மாநில தலைவராகி இருப்பதால் பா.ஜ.க. சட்டசபை தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறதே ?என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "ஒருவரிடம் பதவிகள் இல்லாமல் பிரித்து கொடுக்கப்பட்டால் நல்லது தானே" என்று தெரிவித்தார்.
English Summary
DMK talking about separatism Nainar Nagendran