#சற்றுமுன் || சென்னை மாநகராட்சி முடிவு அறிவிப்பு.! 14 மாநகராட்சியை கைப்பற்றிய திமுக.!
DMK VICTORY ELECTION 2022
சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 101 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் திமுக சென்னை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. தற்போதுவரை சென்னை மாநகராட்சியில் அதிமுக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், ஈரோடு மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 32ல் திமுக கூட்டணி வெற்றிபெற்றதன் மூலம், ஈரோடு மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. அதிமுக 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதேபோல், திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணி 37ல் வெற்றிபெற்று திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது.
ஆவடி மாநகராட்சியையும் திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக-28, அதிமுக-2, சுயேட்சை - 1 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது.
.png)
கரூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் 40ல் திமுக வெற்றி; அதிமுக 2 வார்டுகளில் வெற்றிபெற்று உள்ளது.
மேலும், கும்பகோணம், சேலம், சிவகாசி, திண்டுக்கல், தஞ்சை, கரூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், கடலூர், திருச்சி மாநகராட்சிகள் திமுக வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK VICTORY ELECTION 2022