திட்டமிட்டு லாரியேற்றி படுகொலை - உச்சகட்ட கொந்தளிப்பில் அன்புமணி இராமதாஸ்!
Dr Anbumani Ramadoss Condemn karur murder
சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக புகார் கொடுத்தவர் படுகொலை: பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் சரக்குந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
![](https://img.seithipunal.com/media/karur kal kuvari murder 1.JPG)
இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக போராடிய ஒருவரை கொல்லத் துணிகிறார்கள் என்றால், அவர்களுக்கு வலிமையான பின்னணி இருப்பதாகவே தோன்றுகிறது.
அது குறித்து விசாரணை நடத்துவதுடன், ஜெகநாதனின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/karur kal kuvari murder.JPG)
கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனின் குடும்பத்திற்கு பா.ம.க. சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்;
அத்துடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Condemn karur murder