பணிகள் முடியும் வரை சென்னை அசோக்நகர் பள்ளிக்கு விடுமுறை வழங்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


மழைநீர் வடிகால் பணிகள்: பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், "சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சாலைகள் அடைக்கப்பட்டிருப்பதால், ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் ஒரே ஒரு குறுகிய சாலையில் வந்து, திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இதைத் தடுக்க காவலர்கள் கூட நிறுத்தப்படவில்லை. பள்ளிக்கு முன்பாக வடிகாலுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.

இதைத் தடுக்க கூடுதல் பணியாளர்கள், எந்திரங்களை அமர்த்தி ஓரிரு நாட்களில் பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் முடியும் வரை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு விடுமுறை வழங்கும்படி நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss chennai ashok nagar school issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->