டாக்டர் இராமதாஸ் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் நியமனத்திற்கு பாராட்டு: தனியார் கல்லூரிகளிலும் கட்டாயமாக்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப்பாடத்தை கற்பிப்பதற்கு தமிழ் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையை  பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

பொறியியல் படிப்புகளில்  தமிழ்ப் பாடத்தை தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்று அண்ணா பல்கலை. அறிவித்திருந்தது.  அது கூடாது; தமிழ்ப் பாடத்திற்கு தனியாக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். அதை  அரசு ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவது போதுமானதல்ல. அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தை கற்பிக்க தனி ஆசிரியர்கள்  நியமிக்கப்படுவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!

பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடத்திற்கான பாட வேளைகளை அதிகரிக்கவும்,  அடுத்த ஆண்டு முதல் இரண்டாம் ஆண்டின் இரு பருவங்களிலும் தமிழை கட்டாயப்பாடமாக்கவும்  தமிழ்நாடு அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Happy For Govt Announce 122022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->