பாமக செயல்வீரர் பாக்கியராஜ் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.!
Dr Ramadoss Mourning to pmk pakyaraj dead
அவரின் அந்த இரங்கல் செய்தியில், "அரியலூர் மாவட்டம் ஆலத்திபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர் பாக்கியராஜ் உடல்நலக் குறைவால் காலமான செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
ஆலத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் அவரது பள்ளி பருவத்திலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய காலத்திலும் கூட சமூக ஊடகங்கள் மூலமாக கட்சிப் பணியாற்றினார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரில் இருந்த அவர், விரைவில் நலம் பெறுவார் என்று நம்பிக்கைக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவரது மறைவுச் செய்தி நம்மை தாக்கியுள்ளது.
பாக்கியராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அந்த இரங்கல் செய்தில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Mourning to pmk pakyaraj dead