தமிழைக் காக்க மற்றொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும் - மருத்துவர் இராமதாசு!
Dr Ramadoss Say About Tamilnadu Tamil Issue madurai 2023
"தமிழைத் தேடி" 8 நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு, இந்து மதுரையில் இறுதி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
இதற்காக மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் இராமதாஸ்,
"மற்றொரு மொழிப்போர்க்கு தயாராக வேண்டும். தமிழைக் காக்க மற்றொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும்" என்றார்.
மேலும், ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தாத நாடுகளில் கூட ஆங்கிலம் பேசப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த அவர், ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தந்து அன்னைத் தமிழை காக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாசுபேசினார்.
முன்னதாக, திருச்சியில் நேற்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், "வணிகர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு தமிழில் பெயர் பலகை வைத்தால் மலர்கொத்து வழங்குவேன். தமிழக வணிகர்கள் கடைகளின் முன்பு பெயர் பலகையை தமிழில் எழுதுங்கள்.
அப்படி இல்லையென்றால் அழிப்பதற்காக ஒரு திங்கள் இடைவெளிவிட்டு தமிழகம் முழுவதும் நாங்கள் கருப்பு மை கொண்டு வந்து அழிப்போம். தமிழை காக்க எங்களுக்கும் வேறு வழியில்லை. இது விளம்பரத்துக்காகவோ, வாக்குக்காகவோ அல்ல" என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கான அபராதம் போதுமானதாக இல்லை என்றும், அபராதத்தை உயர்த்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து பெயர்களை தமிழில் வைக்காமல் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது, தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Dr Ramadoss Say About Tamilnadu Tamil Issue madurai 2023