ஸ்டாலினின் அந்த செயலை மனதார பாராட்டிய Dr.ராமதாஸ்.! அப்படியே இதையும் செஞ்சுடுங்க- கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


அரசுப் பள்ளியில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார். தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்டங்களில் இந்த காலை உணவு திட்டத்தை துவங்க முதல் கட்டமாக ரூ.33.56 கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டாலின், அரசு பள்ளிக்கு சென்று குழந்தைகளுடன் உணவு உண்டு, அவர்களுக்கு உணவு பரிமாறி இந்த திட்டத்தை துவங்கி வைத்தார். இத்தகைய சூழலில், பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் மாணவர்களின் பசியாற்றும் இந்த திட்டத்தை பாராட்டியுள்ளார். தொடர்ந்து குழந்தைகள் சாப்பிடும் உணவில் சிறுதானியங்களை சேர்க்க கோரிக்கையும் வைத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், " தமிழ்நாட்டில்  அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி  வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும். 

ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்த வேண்டும்!." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr ramadoss Wishes To MK stalin For Free Breakfast


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->