திமுக அமைச்சர் மகன் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு! 2வது நாளாக அதிரடி!
ED Raid minister kn nehru Arun Nehru
தமிழக அமைச்சர் கே.என். நேருவின் குடும்பத்தினரை சுற்றியுள்ள நிதி முறைகேடு சம்பவம் தொடர்பாக, அமலாக்கத்துறை சோதனைகள் தொடரும் நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மக்களவை உறுப்பினரும், அமைச்சர் நேருவின் மகனுமான அருண் நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுடன் தொடர்புடைய நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, சென்னையில் அருண் நேரு தொடர்புடைய நிறுவனத்தில் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் இரு வீட்டுகளிலும் அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.
இந்நிலையில், திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள அமைச்சர் நேருவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற 10 மணி நேரத்திற்கும் மேலான சோதனை நிறைவடைந்தது.
இதேபோன்று, கோவை மசக்காளிபாளையத்தில் அவரது மற்றொரு சகோதரரான மணிவண்ணனின் வீட்டில் நடைபெற்ற சோதனையும் முடிவடைந்துள்ளது.
நிதி முறைகேடு, பண பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து சர்வே தொடர்பான முக்கிய ஆவணங்களை பெறுவதற்காக இந்த சோதனைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
English Summary
ED Raid minister kn nehru Arun Nehru