ஒற்றைத் தலைமை விவகாரம்.. இபிஎஸ் தனது இல்லத்தில் ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுக கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 27ஆம் தேதி திங்கள்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் கூட்ட அரங்கில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சற்று நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்m வளர்மதி மற்றும் ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் வருகைதந்து எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisami meeting for admk ex ministers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->