பிரபல ரவுடி ஐயப்பன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேர் கைது..ரகசிய இடத்தில் வைத்து விசாரணை!  - Seithipunal
Seithipunal


 பிரபல ரவுடி ஐயப்பன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேரை புதுச்சேரி காவல் துறை கைது செய்து உள்ளனர். மேலும் 12 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

புதுச்சேரி மாநிலம் ,வாணரைப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ஐயப்பன்.இவன் மீது தமிழகம் மற்றும் புதுவையில் கொலை வழக்குகள் உள்ளன.இந்தநிலையில்  திருவண்ணாமலை அருகே சமீபத்தில் பிரபல ரவுடி ஐயப்பனை மர்ம நபர்கள்  வெட்டி படுகொலை செய்தத்து. இதையடுத்து  போலீசார் கொலையாளிகளை கண்டுபிடிக்க  தனிப்படை அமைத்து  தேடி வந்தனர்.மேலும் ரவுடி ஐயப்பனை எதற்க்காக கொலை செய்தார்கள் என்பது குறித்தும்,இல்லை வேறேது காரணமா அல்லது பழி வாங்கும் செயலா என விசாரணையை  முடுக்கிவிட்டுள்ளனர். திருவண்ணாமலை அருகே பிரபல ரவுடி ஐயப்பனை மர்ம நபர்கள்  வெட்டி படுகொலை செய்த சம்பவம் புதுச்சேரி ரவுடிகளை நடுங்க செய்துள்ளது. 
 
இந்த நிலையில் ரபல ரவுடி ஐயப்பன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேரை புதுச்சேரி காவல் துறை கைது செய்து உள்ளனர். மேலும் 12 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .அதில்  கொலை செய்ய திட்டம் தீட்டிய சந்துரு, முத்து ,ராஜேஷ், தனசேகர், புஷ்பநாதன், சூர்யா, குப்புசாமி ,ஜெய்சங்கர், கதிர்வேல் ,நடராஜன் ,மணி ,புவனேஷ் ,அரவிந்த் நாராயணன் என்ற 12 பேரும் தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர். எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து  விசாரணையில் முடிவில் வெளியே தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 arrested in connection with Ayyappan murder case Investigate in a secret place


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->