அதிமுக-பாஜக கூட்டணி: கல்யாண தேதி...? திமுக கூட்டணி தலைவர் கொடுத்த ரியாக்ஷன்!
Edappadi Palaniswami ADMK BJP CPIM
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று டெல்லி சென்றார். அவரது பயணம் குறித்து, "அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட வந்துள்ளேன். யாரையும் சந்திக்கவில்லை" என டெல்லியில் இருந்தபோது விளக்கம் அளித்தார்.
ஆனால், மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் நேரில் சந்தித்தது உறுதியாகி உள்ளது. இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசவில்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தாவது, "முதலில் அலுவலக பார்வைக்கு வந்தேன் என்றார். ஆனால் பின்னர் அமித் ஷாவை சந்தித்தார். எதற்காக இத்தனை ஒளிவு மறைவு? கூட்டணி பேசவில்லை என்றால், நேரடியாக சந்திக்கலாமே?"
"நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. ஆனால் கல்யாண தேதி மட்டும் நிச்சயிக்கப்படவில்லை போல!" என அவர் நக்கல் செய்தார்.
அ.தி.மு.க.- பாஜக தொடர்பு இல்லையென கடுமையாக கூறிய எடப்பாடி பழனிசாமி, மணிக்கணக்கில் பேசியிருப்பது என்ன காரணம்?"
"தமிழ்நாடு பிரச்சினை குறித்து பேசினோம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் எது? அரசியல் உறவே இல்லை என சத்தியம் செய்தவர், எந்த நிர்ப்பந்தத்திற்காக சந்திக்க நேர்ந்தது?" என்று முத்தரசன் தெரிவித்தார்.
English Summary
Edappadi Palaniswami ADMK BJP CPIM