எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் செங்கோட்டையனுக்காக குரல் எழுப்பியதால் பரபரப்பு...!
Edappadi Palaniswami raises voice for Sengottaiyan in the assembly
இன்று பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தமிழ்நாடு சட்டசபையில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதத்தின்போது செங்கோட்டையன் கருத்துக்கள் கூற அனுமதி கேட்டார்.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதற்கு பதிலடி கொடுப்பதற்கு ஆயத்தமான செங்கோட்டையனுக்கு கடைசி வரை யாரும் வாய்ப்பு தரப்படவில்லை.
மேலும் 3, 4 முறை கையை உயர்த்தியும் சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
செங்கோட்டையனை பேசுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.இந்த நிகழ்வு சட்டசபையில் கோலம் சலசலப்பை ஏற்படுத்தியது.
English Summary
Edappadi Palaniswami raises voice for Sengottaiyan in the assembly