டாஸ்மாக் கடை தீ வைத்து எரிப்பு.! இரண்டு பேர் கைது.!
EERODE TASMAC SHOP FIRED
ஈரோடு அருகே டாஸ்மாக் கடையை கொளுத்திய விவகாரத்தில், சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில், 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு பகுதியின் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த, தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் கடையில், நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இருவர் தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, இன்று காலை டாஸ்மாக் கடையை திறக்க வந்த ஊழியர்கள், கடையின் முன் பகுதி தீயில் கருகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது, 55 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 450 மது பாட்டில்கள் தீயில் கருகி முழுமையாக சேதம் அடைந்துவிட்டன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், டாஸ்மாக் கடையின் கதவு இடுக்கில் பெட்ரோலை ஊற்றி இரண்டு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.