சாதி, மத பிரச்சாரம்: தேர்தல் முறையில் புதிய மாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம்!
Election Commission of India Chennai High court
சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல்வாதிகள் வாக்கு சேகரிக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம், தேர்தல் பிரசாரங்கள் சாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், ஜனநாயகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் இந்தியா குழந்தைதான் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் இது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தேர்தல் பிரசாரங்களில் சாதி, மத அடிப்படையிலான பேச்சுக்கள் இன்னும் தொடர்கின்றன. இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க உதவாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தேர்தல் பிரசாரங்களில் சாதி, மத அடிப்படையிலான பேச்சுக்களைத் தவிர்க்க அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
English Summary
Election Commission of India Chennai High court