அமரீந்தர் சிங் சாபம் பலிக்கப்போகிறதா? தோல்வியை நோக்கி முதல்வர் வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள தேர்தல் முன்னிலை நிலவரப்படி பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. எஸ் ஏ டி 4 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், மற்ற கட்சிகள் இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத் முதலமைச்சரான சரண்ஜித் சிங் சன்னி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். பதாவூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது வரை 23 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார். 

முன்னதாக பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியவருமான அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட நவஜோத் சிங் சித்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.

நவஜோத் சிங் சித்து பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளதாகவும், பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை இந்தியாவிற்கு கடத்தி வருவதாகவும், இந்தியாவுக்கும்- தேச ஒற்றுமைக்கும் எதிரானவர், அவர் ஒரு தேச விரோதி என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமரீந்தர் சிங் முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சரண்ஜித் சிங் சன்னியை இந்த தேர்தலில் தோற்கடிப்பதே எனது முதல் நோக்கம் என்று அமரீந்தர் சிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ElectionResults CharanjitSinghChanni VS AMARINDER SINGH


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->