ஊழல் நாடாக தமிழ்நாடு; டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை வெட்கக்கேடு; அண்ணாமலை விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து  அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- 

''தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு மு.க.ஸ்டாலின் ? 

ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. 

பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசை திருப்ப முடியுமா என்று பாருங்கள். வெட்கக்கேடு! என்று பதிவிட்டுள்ளார்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Departments raid on TASMAC is shameful Annamalai criticizes


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->