இரட்டை இலை சின்னம் யாருக்கு..? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!
Eps appeal petition heard in supreme court today
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் தேர்தலில் தனித்தனியே போட்டியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூடி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரையிட வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என பழனிச்சாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இபிஎஸ் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்ததால் இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த மனு மீதான விசாரணை முடிவில் இரட்டை இலை சின்னம் தொடர்பான முக்கிய உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Eps appeal petition heard in supreme court today