பெரும் சோகம்.. நாகை எம்.பி செல்வராஜ் மறைவுக்கு ஈ.பி.எஸ் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ் சென்னையில் இன்று அதிகாலை உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழக முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மாநில தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருன எடப்பாடி பழனிச்சாமி "நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான திரு. எம். செல்வராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ஆன்மா எல்லாம் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என தனது இரங்கல் செய்தியை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS condolences for CPI mp selvaraj death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->