எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

வரும் 7ஆம் தேதி சிவகாசி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளிலும், 8-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகரட்சிகளிலும், 10-ஆம் தேதி வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும் 11-ஆம் தேதி வடசென்னை, தென் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளிலும் 14-ஆம் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS Election campaign 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->