திமுக அமைச்சர் வெள்ளத்தில் சிக்கிய விவகாரமா? ஏரல் பகுதி வட்டாட்சியர் பணியிட மாற்றம்.!!
Eral Regional Commissioner transfered
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினரான இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் ஏரல் பகுதியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 18ம் தேதி மாலை ஏரல் பகுதிக்கு சென்று தூத்துக்குடி திரும்பியுள்ளார். அப்போது ஏரல் அருகேயுள்ள உமரிக்காடு பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்தால் அமைச்சரால் அங்கிருந்து வர முடியவில்லை.
இதையடுத்து அவருடன் இருந்த கட்சி நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பத்திரமாக அழைத்து சென்று உமரிக்காடு கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டுக்கு அழைத்து சென்று தங்கவைத்துள்ளனர். அந்தப் பகுதியையும் மழை வெள்ளம் சூழந்ததால் அங்கிருந்து அமைச்சரால் கடந்த 3 நாட்களாக வெளியே வரமுடியவில்லை. தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தகவல் தெரிவிக்கவும் இயலவில்லை.
இந்நிலையில் அமைச்சர் உமரிக்காடு கிராமத்தில் சிக்கியிருப்பது குறித்த தகவல் அதிகாரிகள் மற்றும் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமையில் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் அமைச்சரை பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். மழை வெள்ளத்தில் அமைச்சரே 3 நாட்கள் சிக்கி தவித்தது பரபரப்பை ஏற்படுத்தியதோடு பேசும் பொருளாக மறியது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்யாத வட்டாட்சியர் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏரல் வட்டத்திற்கு புதிய வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணனை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழை வெள்ளத்தின் போது ஏரல் பகுதியில் சிக்கி இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பிறகு தேசிய பேரிடர் மற்றும் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட நிலையில் தற்போது ஏரல் வட்டாச்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
Eral Regional Commissioner transfered