கூட்டுறவு துறையா? கடன் தள்ளுபடி துறையா? அன்று உதயநிதி பிரச்சாரம் - இன்று துரைமுருகன் விளக்கம்! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தை அடுத்த காட்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், வேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துறைமுருகன் "கூட்டுறவு துறையின் மூலம் மக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்தால் எவ்வாறு அரசாங்கம் நடக்கும். பயிர் கடன், கால்நடை கடன், மாற்றுத் திறனாளிகள் கடன் இப்படி மக்கள் வாங்கி அனைத்து கடனையும் எப்படி ஒரு அரசாங்கம் தள்ளுபடி செய்ய முடியும். அரசாங்கம் சரியாக நடக்க வேண்டும் என்றால் வாங்கி கடனை ஒழுங்காக திருப்பி செலுத்த வேண்டும். எப்படி இருந்தாலும் தள்ளுபடி செய்வார்கள் என்ற மனநிலை வந்துவிடக் கூடாது. கடனை திருப்பி கட்டும் நல்ல உணர்வோடு இருக்க வேண்டும்" என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

இந்த நிலையில் திமுக ஆட்சியை பிடிப்பதற்காக ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளது. அதில் கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, கூட்டுறவு கடன் ரத்து என அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக தற்போதைய சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிரச்சார வாகனத்தின் மேல் நின்று கொண்டு அடுத்து அமைவது நம்முடைய ஆட்சி தான் அதனால் அனைவரும் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வாங்கிக் கொள்ளுங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்கிறோம் என வாக்குறுதி அளித்தார். 

இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீட்டில் சேர்த்து வைத்த நகைகளை அனைத்தையும் கொண்டு போய் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு தகுதியானவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி என அறிவித்தது. இதனால் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை நம்பி பலர் நகைகளை அடமானம் வைத்த ஏமாற்றம் அடைந்ததாக அதிமுக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது..

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Everyone repay the loan taken in cooperative societies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->