பிரபல எம்.எல்.ஏ பதவி நீக்கம்!...அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பின்னர் அதிஷி கடந்த 21-ம் தேதி டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சத்தர்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட கர்தார் சிங் தன்வார் வெற்றி பெற்றார்.  கடந்த ஜூலை மாதம் இவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, மற்றொரு எம்.எல்.ஏ. ராஜ்குமார் ஆனந்துடன் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், டெல்லி சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்வாரை கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தகுதி நீக்கம் செய்ததாகவும், ஜூலை 10, 2024ம் தேதி முதல் அவரது சட்டசபை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous MLA dismissal excitement in the political circle


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->