விழாக்கோலம் பூண்ட விக்கிரவாண்டி!...வி.சாலையை நோக்கி சாரை சாரையாக படையெடுக்கும் தொண்டர்கள்!
Festival vikravandi volunteers invading the v road one by one
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள் காரணமாக விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், சாலை நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் கரும்புகளுடன் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள், தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர்.,
அதிக கூட்டம் கூடுவார்கள் என்பதால், காலை 10 மணிக்கே மாநாட்டு திடல் திறக்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் விஜய் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கட்டணமின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டணமில்லாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
English Summary
Festival vikravandi volunteers invading the v road one by one