இலங்கையில் வாழும் மக்களுக்கு விசிக சார்பில் நிதி உதவி.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறிகள், மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கு மக்கள் மணிக்கணக்கில் பெட்ரோல் பங்குகளில்  நின்று பெட்ரோல் மற்றும் டீசல்களை வாங்கி செல்கின்றனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளே காரணம் என எதிர்க் கட்சிகள் மற்றும் மக்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது. இதனால் இலங்கையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து நிதி உதவி மற்றும் பொருள் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் 10 லட்சத்துக்கான காசோலையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

financial assistance of vck to srikanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->