செம்ம டிவிஸ்ட் : பாஜக முதலமைச்சர் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.! சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி.!
goa election 2022 cm win
கோவாவின் சாங்குலிம் சாகுபடியும் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. மாலை 3.00 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 4 மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதில், கோவா மாநிலத்தில் பாஜக சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடக்கி காலை 10 மணி அளவில் கோவா மாநில (பாஜக) முதலமைச்சர் பிரமோத் சாவந்த், பெரும் பின்னடைவை சந்தித்து இருந்தார். இது பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சற்றுமுன் வெளியான அவிவிப்பில், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 3.00 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, கோவா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தற்போது 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், ஆம் ஆத்மி இரு இடத்திலும், சுயேச்சை-மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன
பெருபான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.