சீ ச்சீய்!!!வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு... திமுக அரசு..!!!- ஜி.கே வாசன்
government did not fulfill promise DMK government GK Vasan
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் 'ஜி.கே.வாசன்', திண்டுக்கலில் நத்தம் பகுதியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்று அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது," வருகின்ற சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று அ.தி.மு.க. தலைமையில் சிறப்பாக ஆட்சி அமையும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் ஒரே எண்ணத்தில் இருக்கும் மேலும் பல கட்சிகள் சேரக்கூடும்.
தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக உள்ளது. டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்த ஊழல் வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் தமிழக அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.
டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கான எண்ணம் அவர்களுக்கு இல்லை. எனவே மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இங்கு சித்தன் எம்.பி.யாக இருந்த போது நத்தம் தொகுதிக்கு அதிக வளர்ச்சித்திட்ட பணிகள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மக்கள் பணியில் த.மா.கா. ஈடுபடும்" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
government did not fulfill promise DMK government GK Vasan