பாகிஸ்தானை முறியடித்து கின்னஸ் உலக சாதனை படைத்த இந்தியா.! அமித்ஷா தலைமையில் 78 ஆயிரம்பேர்.! - Seithipunal
Seithipunal


ஒரே நேரத்தில் 78220 தேசியக் கொடிகளை அசைத்து கின்னஸ் புத்தகத்தில் இந்தியா தனது பெயரை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.

18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான், லாகூரில் நடந்த நிகழ்வில் 56 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் தங்கள் தேசியக் கொடியை அசைத்து கின்னஸ் உலக சாதனை படைத்து இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தலார் மைதானத்தில் வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சயில் 78,220 தேசியக் கொடிகளை ஒரே நேரத்தில் அசைத்து, இந்தியா தனது பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்து, வரலாறு படைத்துள்ளது.

இந்த கின்னஸ் சாதனை வரலாற்று நிகழ்வின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனிருந்தார். 

இதுகுறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவிக்கையில், "சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பாபு வீர் குன்வர் சிங்கின் பிறந்தநாளின் போது, இந்திய தேசியக் கொடி ஐந்து நிமிடங்களுக்கு அசைக்கப்பட்டது. இதன் மூலம் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சங்' கொண்டாடப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பீகார் மக்கள் தானாக முன்வந்து ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 78,220 பேர் தேசியக் கொடியை அசைத்தனர். இது புதிய உலக சாதனையாகும்" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guinness book of record indian national flag 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->