#BigBreaking || ஹெலிகாப்டர் விபத்து எப்படி நடந்தது? சற்றுமுன் கருப்பு பெட்டி கண்டு பிடிப்பு.!
helicop black box
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் விமான படை தளத்தில் இருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 ராணுவ வீரர்களுடன் சென்றார். குன்னூர் அருகே காட்டேரி மலைபாதையில் பயணித்த போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில், அங்கிருந்த மக்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி 13 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கண்டெக்கப்பட்ட கருப்புப்பெட்டி ராணுவம் மற்றும் விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீட்டெடுக்கப்பட்ட கருப்பு பெட்டியை பெங்களூர் அல்லது டெல்லி கொண்டு சென்று ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காட்டேரி மலைப்பகுதியில் இந்த கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவல் தெரிவிக்கின்றது. கண்டெடுக்கப்பட்ட கருப்புப்பெட்டி உடன் மூன்று பொருட்களை ராணுவ அதிகாரிகள் தற்போது மீட்டுள்ளனர்.
இந்த கருப்பு பெட்டியை ஆராயும் போதுதான், இந்த ஹெலிகாப்டர் விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்த உண்மை தகவல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.