அந்த கடைசி நிமிட வீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்து ஆய்வு செய்யும் தமிழக போலீஸ்.! காரணம் என்ன தெரியுமா?
helicopter crash last min video
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் விமான படை தளத்தில் இருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 ராணுவ வீரர்களுடன் சென்றார். குன்னூர் அருகே காட்டேரி மலைபாதையில் பயணித்த போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில், அங்கிருந்த மக்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி 13 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிட காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சுற்றுலாவுக்கு சென்ற சில பயணிகள் எடுத்துள்ளதாக தெரியும் அந்த காணொளியில், பனிமூட்டம் நிறைந்த பகுதியில் தாழ்வாக இராணுவ ஹெலிகாப்டர் சென்று மறையும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிட காட்சிகளை படம் பிடித்தவரின் செல்போனை கோவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி உள்ளனர்.
ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ உண்மைதானா என்பதை ஆய்வு செய்ய ஆய்வு செய்து கண்டறியவே போலீசார், படம் பிடித்தவரின் செல்போனை கோவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர்.
English Summary
helicopter crash last min video