ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு! இந்து முன்னணி நிர்வாகியை சுத்து போட்ட போலீஸ்!
Hindu munnani executive arrested in jayakondam
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய இந்து முன்னணி நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன் பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். திருச்சி கோட்ட இந்து முன்னணி பொறுப்பாளராக இருந்து வரும் இவர் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் இந்து முன்னணி நிர்வாகி ராஜசேகரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
English Summary
Hindu munnani executive arrested in jayakondam