நள்ளிரவில் பயங்கரம்!...திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டிப் படுகொலை! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்த குன்னம்பட்டியை சேர்ந்த மாசி என்பவர் வேடசந்தூர் தி.மு.க தெற்கு ஒன்றிய பொருளாளராக இருந்த நிலையில், நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக இவரது மனைவி முத்துமாரி செயல்பட்டு வருகிறார்.

மாசியின் சொந்த தோட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ளது. தோட்டத்திற்கு  நேற்று நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாசி மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து சமத்துவபுரம் அருகே சென்ற அவரை மர்ம நபர்கள் வழிமறித்து அறிவாளால் வெட்டியுள்ளனர். தொடர்ந்து மாசி இருசக்கர வாகனத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.  

இருந்த போதிலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று தலை கழுத்து கை பகுதிகளில் சரமாரியாக வெட்டியதில் மாசியின் ஒரு கை துண்டாகி தனியே விழுந்தது.

இந்த சம்பத்தில்  மாசி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேடசந்தூர் போலீசார் மாசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து  மாசியின் உடல் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horror in the middle of the night dmk executive brutally hacked to death near dindigul


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->