"குடிகெடுத்த கருணாநிதியின் குடும்ப ஆட்சி".. தடித்த வார்த்தையால் விமர்சித்த எச்.ராஜா..!!
HRaja criticizes the DMK government
கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற பாஜக சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "ராஜாஜி 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தபோது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு கருணாநிதி அரசாங்கம் பூரண மதுவிலக்கை திரும்ப பெற்று சாராயக்கடைகளை திறந்தது. அதற்கு காரணம் சாராயக் கடைகளை திறக்கவில்லை என்றால் மக்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பார்கள் என கூறினார்.
இப்பொழுது தமிழக முழுவதும் 5000க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளது. அதேபோன்று டாஸ்மாக் ஏடிஎம்களும் வந்துவிட்டது. ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி சாராயத்தை பெற்றுக் கொள்ளலாம். கருணாநிதி சாராயத்தை திறந்து விட்டு தமிழ் குடும்பங்களை அழித்த குடிகெடுத்த கருணாநிதியின் குடும்பம் ஆட்சியில் இருக்கும் சூழலில் இன்று கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்கம் இந்த விஷயம் வெளியே வந்து விடக்கூடாது வாய் அடைக்க வேண்டும் என்பதற்காக இறந்தவர்கள் அனைவருக்கும் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால் சிவகாசியில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் என்ன அர்த்தம்..? முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது" என எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
HRaja criticizes the DMK government