திறமையற்ற அரசு திமுக, பணத்தாலோ, புகழாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது; எடப்பாடி பழனிசாமி பேச்சு..!
I cannot be enslaved by money or fame Edappadi Palaniswami speech
பணத்தாலோ, புகழாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை அன்னூர் பகுதியில் அத்திக்கடவு மற்றும்அவிநாசி திட்ட கூட்டியக்கத்தின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் பேசியதாவது: ரூ.1652 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டத்தை மாநில அரசின் நிதியில் இருந்து முடிக்க உத்தரவிட்டேன். அ.தி.மு.க., ஆட்சியின் போது, 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டது. அதன்பிறகு, தி.மு.க., ஆட்சி அமைந்த உடன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தத் திட்டத்தை 04 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி வரை 06 தடுப்பணைகள் கட்ட உத்தரவிடப்பட்டது. ஆனால், ஒரு தடுப்பணை அமைக்கும் பணி 40 சதவீதம் முடிந்தது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ளார்.

மேலும், அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டம் போல தமிழகத்தில் இதுவரையில் எந்த திட்டமும் வரவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிறவிப் பயனை அடைந்து விட்டேன். இந்தத் திட்டத்திற்காக எந்த முயற்சியும் செய்யாமலேயே வந்து, திட்டத்தை திறந்து வைப்பர்களும் உள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கி திட்டத்தை தொடங்கி வைத்தேன். மக்கள் நலனை பற்றி தி.மு.க., அரசுக்கு அக்கறையில்லை. திறமையற்ற அரசு தான் செயல்பட்டு வருகிறது. பணத்தாலோ, புகழாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது. யாருக்கும் நான் அடிமையாக மாட்டேன்.

2026-இல் அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டத்தின் 02-வது கட்டப்பணி தொடங்கப்படும். எனக்கு எடுக்கும் இந்த நன்றி பாராட்டு விழாவை, விவசாயிகளின் பாராட்டு விழாவாக பார்க்கிறேன், என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
I cannot be enslaved by money or fame Edappadi Palaniswami speech