இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது - CM ஸ்டாலின் வெளியிட்ட காணொலி! - Seithipunal
Seithipunal


லண்டன் சிம்பொனி இசைநிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் தெரிவித்திருப்பதாவது, "இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது!

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். 

உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ilaiyaraja Valiant symphony cmstalin chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->