இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது - ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்.!
India and the European Union have a lot in common Ursula van der Leyen European Commission
இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது என்று, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
டெரி - தில்லியில் உள்ள எரிசக்தி மற்றும் வள நிறுவனம் ஏற்பாடு செய்த 'யூத் ஃபார் எ க்ரீனர் ஃப்யூச்சர்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
அதில், "இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. 2030ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து 50% ஆற்றலைப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்குகளையே நாங்களும் கண்டுள்ளோம்.
நாம் உண்மையில் சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், உயிரி, நீர் மின்சாரம்... புவிவெப்பம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற கருத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.
இவைதான் பொருளாதாரத்தின் வெற்றி, மக்கள் முன்னேற்றம் மற்றும் நமது காலநிலை பாதுகாப்பிற்கான முக்கிய விஷயம் ஆகும்" என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.
English Summary
India and the European Union have a lot in common Ursula van der Leyen European Commission