பாஸ்போர்ட் எடுக்க இனி இது கட்டாயம் - புதிய விதிமுறை அமல்!
India Passport New rule Birth Certificate
இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இனி, புதிய கடவுச்சீட்டு பெறுவதற்காக பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு, மாநகராட்சி, நகராட்சி அல்லது அதற்குச் சமமான அதிகாரப்பூர்வ அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து அமலுக்கு வருகிறது. எனினும், 2023 அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இதை கட்டாயமாக்கப்படவில்லை. அவர்கள், பள்ளிச் சான்றிதழ், நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய உத்தரவு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பிறந்த தேதிக்கான ஆதாரமாக பயன்படுத்தலாம்.
1969ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் தற்போது கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அரசின் அனைத்து சலுகைகளை பெறவும் பிறப்புச் சான்றிதழை மட்டுமே பிறந்த தேதிக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
English Summary
India Passport New rule Birth Certificate