காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னி வீரர் திட்டத்தை குப்பை தொட்டியில் வீசும் - ராகுல் காந்தி!! - Seithipunal
Seithipunal


ராணுவத்திற்கு அக்னி வீர் திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் என்று குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், மே 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் 49 தொகுதிக்கும் மக்களவை தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

 இந்த நிலையில் ஆறாம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் தயாராகி தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அரியானா மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசுகையில்,விவசாயிகளின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்யவில்லை. அதானி மற்றும் அம்மானைப் போன்ற கோடீஸ்வரி களின் கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

 வேலையில்லா திண்டாட்டம், பண வீக்கம், விவசாயிகளின் பிரச்சினை குறித்து எந்த செய்தியும் எந்த செய்தி சேனலும் வெளியிடுவதில்லை. ராணுவத்திற்கு அக்னி வீர் திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனே இந்த திட்டத்தை குப்பை தொட்டியில் வீசும் என்று பேசிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Army Agni Veer project after Congress government delect project


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->