இந்தியாவின் புதிய குடியரசு தலைவர் பதவியேற்கும் நாள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வரும் ஜூலை மாதம், 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக, இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி,

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம், 18ஆம் தேதி நடைபெற உள்ளது. 
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும். 
புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார்,

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி நடைபெறும்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30ஆம் தேதி நடைபெறும். 
வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2ஆம் தேதி கடைசி நாளாகும். 

இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆக உள்ளது. 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,033 எம்எல்ஏக்கள் என மொத்தமாக 4,809 பேர் வாக்களிப்பார்கள்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian President Election 2022 july


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->