CPI கேட்கும் 4 தொகுதிகள்.. திமுகவின் அதிரடி முடிவு..! பரபரக்கும் அறிவாலயம்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை திமுக ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீடு செய்வதில் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை வழங்கிய தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பல கூட்டணி கட்சிகள் அடம்பிடித்து வரும் நிலையில் கொங்கு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே தொகுதி பங்கிட்டை உறுதி செய்துள்ளது திமுக தலைமை.

இத்தகைய நெருக்கடியான சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் மதிமுக ஆகிய நான்கு கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் திமுக தொகுதி பங்கிட்டு குழுவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குழுவினர் நான்கு தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளனர். 

ஆனால் திமுக தரப்பு கடந்த 2019 ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்திய பிறகு உடன்பாடு இயற்றப்பட்டால் இன்று திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info DMK allocates 2 seats for CPI


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->